UPI பணச் செலுத்த நிராகரிப்புகளை எவ்வாறு குறைப்பது

UPI பணச் செலுத்த நிராகரிப்புகளை தவிர்ப்பதற்கு பரிவர்த்தனை செய்யும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவும்.

 

  • UPI வகை மூலம் பணம் செலுத்தும் போது உங்கள் கணக்கில் போதுமான நிதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்தக் கொள்ளவும்.
  • பரிவர்த்தனை செய்யும்போது சரியான UPI பின் உள்ளிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • UPI பரிவர்த்தனைகள் மீது நிர்ணயிக்கப்பட்ட வுரம்புகளின் படி பரிவர்த்தனை மேற்கொள்ளவும்.
  • பெறுநரின் கணக்கு தடை செய்யப்படவில்லை/முடக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
  • பதிவு செய்த முதல் 24 மணி நேரத்திற்கு ரூ.5000க்கு (ஒட்டு மொத்தம்) மேல் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்

 

  • தவறான UPI பின்னை 3 தடவை உள்ளிட வேண்டாம், அதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பயன்படுத்தி மீட்டு அமைக்கவும்:

    • கணக்குள் பிரிவில் UPI பின்னை மீட்டமை மீது கிளிக் செய்யவும்.
    • கணக்கின் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும்
    • கணக்கின் டெபிட் கார்டின் காலாவதி தேதியை உள்ளிடவும்
    • வங்கியிலிருந்து பெறப்பட்ட  OTP உள்ளிடவும்
    • புதிய UPI பின்னை உறுதி செய்யவும்
    • UPI பின் மீட்டமைப்பு உறுதிப்படுத்தலை நீங்கள் பெறுவீர்கள்